close
Choose your channels

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி!

Saturday, March 6, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தற்போது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களுடன் அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் 4 போட்டிக் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற நிலையில் முன்னிலைப் பெற்று வெற்றிக் கோப்பையை கைப்பற்ற உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, கேப்டன் ஜோ ரூட் தலைமையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது. 4 போட்டி கொண்ட இத்தொடர் போட்டியில் முதல் வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த அடுத்தப் போட்டிகளில் தோல்வி அடைந்து உலக டெஸ்ட் கோப்பை சாம்பியன்ஷிப் வாய்ப்பையும் இழந்து உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியாவுடன் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி கலந்து கொள்ள இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.