லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லண்டன் நகரில் உள்ள முக்கிய பகுதியான பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். கத்தியால் குத்தியும், வேனை விட்டு மோதியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் நாட்டு அணிகள் மோதுகின்றன. லண்டனில் இருந்து சுமார் 100 கிமீ தூரம் உள்ள பிர்மிங்காம் என்ற இடத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தபோதிலும், போட்டியை ரத்து செய்வது குறித்து ஐசிசி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று போட்டி நடந்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று மட்டும் இப்போதைக்கு தகவல் வெளிவந்துள்ளது.

More News

ரஜினியின் அரசியல் சாணக்கியத்தனம் தொடங்கிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மீண்டும் இணைந்த 'என்னை அறிந்தால்' வெற்றிக் கூட்டணி

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் ஒரு புதிய படத்தை இயக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சிவாஜிக்கு குருவாக இருந்த பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சாமிக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 95...

கமல், ரஜினி முடிவுகள் குறித்து கருத்து கூறிய சமுத்திரக்கனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளது குறித்தும், ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கமல் கூறியது குறித்தும் பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

சென்னை சில்க்ஸ்-ஐ அடுத்து மேலும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து

கடந்த 31ஆம் தேதி சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஏழுமாடி கட்டிடத்தில் திவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடம் முழுவதும் எரிந்து சிதிலமடைந்துவிட்டது. தற்போது மீதியுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது...