தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து மோடி அரசு எடுத்த மூன்று முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி பாதுகாப்பு குறித்த் ஆலோசனை செய்தது.

இந்த ஆலோசனையின் முடிவில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்ட அதிக ஃபேவரைட் நாடு என்ற வணிக அந்தஸ்தை ரத்து செய்வது.

இரண்டாவதாக இந்த தாக்குதலுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

மூன்றாவதாக பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதர், அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

அடுத்த மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்: வீரமரணம் அடைந்த வீரரின் தந்தை அறிவிப்பு

நேற்று பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்றின் மனிதவெடிகுண்டு தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சி,ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது

கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், 'கஜினி' உள்பட ஒருசில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

காஷ்மீர் தாக்குதல்: கோலிவுட் திரையுலகினர் கண்டனம்

காஷ்மீரில் மனிதவெடிகுண்டு நடத்திய பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீர்ர்கள் பலியாகிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுவொரு ஆரம்பம்தான்: காஷ்மீர் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ எச்சரிக்கை

காஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை வெடிகுண்டுகள் நிரம்பிய தீவிரவாதியின் கார் மோதியதால் பேருந்தில் பயணம் செய்த 39 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர்.

90ml படத்தின் கதை ஓவியாவின் உண்மைக்கதையா? அனிதா உதூப்

சமீபத்தில் வெளியான ஓவியாவின் 90ml படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பாணி படமென்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.