வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி: 

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்ள நிலவரப்படி வாரன் பஃபெட்டின் மொத்த சொத்து மதிப்பு 67.9 பில்லியன் டாலர்கள் என்பதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பேஸ்புக் இன்க் மற்றும் சில்வர் லேக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளதால் அவர் வாரன் பஃபெட்டை தற்போது முந்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பிபி பிஎல்சி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது என்பதும் இதனாலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

லண்டனை சேர்ந்த பிபி பிஎல்சி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஜியோ பிபி (Jio BP) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பதும் இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவிகித பங்குகளும், பிபி பிஎல்சி நிறுவனத்திற்கு 49 % பங்குகளையும் பங்குகளையும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் இந்த வாரம் வாரன் பபெட் சொத்து மதிப்பு குறைந்தது என்பதும் இதனால் அவர் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.