இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜக 294 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியபோது, 'இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. வலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செழிப்புடன் வளர்வோம்' என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக வாக்களித்த அனைவரும் நன்றி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

திருமணத்திற்கு பின் ஆர்யா-சாயிஷா எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

பிரதமர் மோடிக்கு கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து!

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பதவியேற்க தனது வாழ்த்துக்கள் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதித்துவிட்டீர்கள்: பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை தனித்தே பெற்றுவிட்டது.

நான் எவ்வளவு ஓட்டு முன்னிலையில் உள்ளேன்? சன்னிலியோன் கேள்வி

மக்களவை தேர்தலில் போட்டியிடாத நடிகை சன்னிலியோன் தான் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளேன் என்று கேள்வி கேட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

'தளபதி 64' திரைப்படம் கேங்க்ஸ்டர் படமா?

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிறிசியாளராக விஜய் நடித்து வருகிறார்