close
Choose your channels

எலியும் பூனையுமாக சீறிக் கொள்ளும் இந்தியா-சீனா: அடிப்படை காரணம்தான் என்ன???

Monday, June 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எலியும் பூனையுமாக சீறிக் கொள்ளும் இந்தியா-சீனா: அடிப்படை காரணம்தான் என்ன???

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் எல்லைப் பிரச்சனை இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்தது அல்ல. சுதந்திர இந்தியா உருவாக்கப் பட்ட பின்னணியில் இருந்தே பிரச்சனையும் ஆரம்பித்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இருநாட்டு எல்லைகளையும் பிரிக்கும் எந்த எல்லை வரையறையும் இல்லையென்றே உயர் இராணுவ மட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இயற்கை அமைப்புகளை வைத்து இருநாடுகளும் ஒருவாறு எல்லைப் பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி பிரிக்கப்பட்ட பகுதியைத்தான் மக்மோகன் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என அழைக்கப் படுகிறது. மக்மோகன் எல்லைக் கோட்டுப் பகுதியை மியான்மர் நாட்டு எல்லைக்குப் பகுதிக்கு சீனா ஒத்துக் கொள்கிறது. ஆனால் இந்திய எல்லைப் பகுதிக்கு மட்டும் இந்த வரையறையை சீனா நிராகரிக்கிறது. இதனால் எல்லைக் கோட்டுப் பகுதியைத் தாண்டியும் சீனாவின் சில பகுதிகள் இருப்பதாக சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தப் பிரச்சனைதான் 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போராகவே வெடித்தது. அந்தப் போரில் காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சய் சீனா வை இந்தியா இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர லடாக் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் பாங்காங் ஏரி பகுதியைக் குறித்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் வெகுகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த ஏரிப்பகுதிதான் இருநாட்டின் எல்லைகளை தெளிவாக பிரிக்கும் ஒரு நிலப் பகுதியாக கருதப்படுகிறது இந்தப் பகுதியிலும் ஏறக்குறைய மூன்றில் 2 விழுக்காட்டு நிலப்பகுதி சீனாவின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கு இந்நிலப்பகுதியில் மூன்றில் 1 பங்கு மட்டுமே சொந்தமாக இருப்பாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 1 சதவீதப் பகுதியில் தற்போது இந்திய இராணுவம் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கட்டமைப்பு பணிகள்தான் சீனாவின் சீற்றத்திற்கு காரமாக அமைந்து விட்டது. ஆனால் சீனா தனது எல்லைப் பகுதியில் அதிகபடியான கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

சீனாவின் கம்யூனிச இராணுவம் இந்தியாவோடு மட்டுமல்ல அமெரிக்கா, ஜப்பான்,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடும் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அதிரடியை காட்டுகிறது. இந்த நாடுகள் கொரோனா பரவல் விவகாரத்தில் சீனா மீது நேரடியாகக் குற்றம் சாட்டிய நாடுகள் என்பதையும் கவனிக்க தவறிவிடக் கூடாது. இந்நிலையில் சீனாவின் மூன்று பக்க எல்லைகளிலும் அதன் இராணுவ வீரர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுடன் பல வருடங்களாக சீனாவிற்கு பிரச்சனை இருக்கிறது. அதைத்தவிர தென் சீனக் கடல் பகுதிகளில் இருக்கும் செயற்கை தீவுகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இனதால் சீனா, ஜப்பானோடு சண்டையை ஆரம்பித்து இருக்கிறது. இந்தப் பகுதிகளில் தற்போது அமெரிக்க கப்பற்படைகள் தனது வலிமையை காட்டுவதற்காக குவிக்கப் பட்டு உள்ளன.

அமெரிக்கா கப்பற்படையின் அதிரடி நடிவக்கைகள் இந்தியாவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப் படுகிறது எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மையில் தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுவதால் உலகின் முக்கால் வாசி நாடுகள் கொதிப்படைந்து இருக்கின்றன. காரணம் ஆசியப் பகுதிகளோடும் ஆஸ்திரேலியக் கண்டத்தோடும் கடல் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட வேண்டுமானால் தென் சீனக் கடல் பகுதி பொதுச் சொத்தாக இருக்க வேண்டியது அவசியம். உலகின் பெரும்பலான நாடுகளின் நிலப் பகுதியை எளிதாக அடைவதற்கு தென் சீனக் கடல் பகுதி ஒன்றே முக்கிய வழியாக இருக்கிறது. இந்தக் காரணங் களுக்காகத்தான் சீனாவும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது.

தென் சீனக் கடல் பகுதியில் தனது வலிமை நிரூபிக்க வேண்டும் என்பதால் பல செயற்கையான தீவுகளை உண்டாக்கி தனது எல்லைகளாக வகுத்து இருக்கிறது சீனா. இதனால் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி அந்தப் பகுதியில் மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் எல்லைப் பகுதி எது என்பதைக் குறித்து இந்தியா எப்போதும் தெளிவான கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும் சீனா தனது எல்லை வரையறைகளை பொதுவெளியில் வைக்க மறுத்து விடுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப் படுகிறது. இருநாட்டு எல்லைப் பகுதியாக வரையறுத்து இருக்கும் பாங்சாங் ஏரியை ஒட்டி சாலை, பாலம் போன்ற கட்டமைப்புகளை இந்தியா மேற்கொண்ட போது சீனா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் இருநாட்டு இராணுவங்களும் எல்லைப் பகுதியில் குவிக்கப் பட்டன. இதனால் கடுமையான பதட்டம் நிலவியது. இருநாடுகளும் போர் செய்யும் நோக்கத்தில் செயல்படவில்லை என்பதை வெளிப்படையாக பேச்சு வார்த்தையில் தெரிவித்து வருகின்றனர் என்றாலும் இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் கடந்த ஜுன் 6 ஆம் தேதி இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் கையெழுத்திட்டுக் கொண்ட ஒப்பந்தம் குறித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜுன் 6 ஆம் தேதி போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு இராணுவ வீரர்களும் தங்களது இராணுவ படைகளை விலக்கிக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தன. ஆனால் சீனாவின் துருப்புகள் எல்லையில் இருந்து விலகாமல் கூடாரத்தை அமைத்து இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தாக்குதல்கள்தான் கல்வான் பதற்றம் எனவும் இராணுவ மட்டத்தில் கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜிங்பிங் இரண்டு முறை இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். அப்போது இருநாட்டு உறவுகளும் வலுவடையும் விதத்தில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப் பட்டது எனவும் எல்லைப் பகுதி குறித்த புரிந்துணர்வுகள் ஏற்படும் எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டு இருந்தன. ஆனால் தொடர்ந்து சீனா பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் அச்சுறுத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச மட்டத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு சீனாவின் தரப்பில் இருந்து வெளிப்படையான பதில் எதுவும் முன்வைக்கப் படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.