close
Choose your channels

1920 பிளாஷ்பேக் காட்சி.. 'இந்தியன் 2' படத்தின் கமலின் வேற லெவல் கெட்டப்!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வருவதாகவும், இதில் 1920ஆம் ஆண்டு நடந்த பிளாஷ்பேக் காட்சியின் படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான வேற லெவல் கெட்டப் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மேக்கப் போடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வயதான தோற்றம் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அசத்திய நிலையில் தற்போது இளமையான தோற்றம் கொண்ட இந்த கெட்டப் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண, ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.