close
Choose your channels

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும்'இந்தியன் 2' படக்குழு

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்தப் படம் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் ராஜமுந்திரி சிறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு போபால் நகரில் நடைபெற்று வருகிறது. சுமார் 2000 துணை நடிகர்களுடன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் ஷங்கர் படமாக்கி வருகிறார்

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியன்-2 படக்குழுவினர் தைவான் நாட்டிற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பின்போது கமலஹாசனுடன் நாயகி காஜல் அகர்வாலும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரித்திசிங், பிரியா பவானிசங்கர், சித்தார்த், வித்யூத், நெடுமுடி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz