கமல், ஷங்கர் இல்லாமல் நடந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 11 2020]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த ‘இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி திடீரென இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதால் இன்னும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்காக பாடலொன்று வெளிநாட்டில் படமாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதற்கான அனுமதியும் மற்றும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்ததாகவும், இதனை அடுத்து இந்த படப்பிடிப்பை அனுமதி பெற்ற காலத்திற்குள் நடத்தாவிட்டால் அந்த பகுதியில் இனிமேல் படப்பிடிப்பே நடத்த முடியாது என்றும் கூறப்பட்டது

ஆனாலும் ‘இந்தியன் 2’ விபத்து விசாரணை காரணமாக கமல், ஷங்கர் உள்பட படப்பிடிப்பு குழுவினர்கள் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர்கள் இந்த பாடலை வெளிநாட்டில் படமாக்கியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த பாடலில் கமல்ஹாசன் நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் பிரமாண்டமாகவும் அவருடைய பாணியிலும் இருக்கும் ஆனால் முதல் முறையாக ‘இந்தியன் 2’படத்தில் ஷங்கர் இல்லாமல் பாடல் காட்சி படமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

தனுஷ் செய்த தாய்மாமாவின் கடமை: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர்

நானும் ரவுடிதான்' நடிகருக்கு நிதியுதவி செய்த விஜய்சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் சமீபத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம்!!! 

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்

கோழிகளுக்கு கொரோனா??? வதந்தி பரப்பிய ஒருவர் கைது...

பண்ணை கோழிகளுக்கு கொரோனா பரவியதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.