நேற்று முதல் தொடங்கிய 'இந்தியன் 2' படப்பிடிப்பு: கமல், காஜகல் கலந்து கொள்வது எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் ’இந்தியன் 2’ . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து புத்துணர்ச்சியுடன் நேற்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

நேற்று நடைபெற்ற பூஜையில் இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் நேற்றைய முதல் நாள் படப்பிடிப்பில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டதாகவும், இந்தக் காட்சிகளின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன் செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துகொள்வார் என்றும் அதேபோல் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர்களும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படத்தையும் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

டிரைலரை விட மொக்கையா இருக்குது படம்: 'லைகர்' முதல் காட்சி பார்த்தவர்களின் விமர்சனம்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. 

தனுஷ் மகன் கேப்டன், துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியின் விளையாட்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராய்

கூலாக குடிக்கும் ஷிவானி நாராயணன்: செம ஹாட் புகைப்படம் வைரல்!

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

'ஜெயிலர்' படத்தில் தமன்னாவின் கேரக்டர் இதுவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நிலையில் இந்த படத்தில் நான்கு முக்கிய நட்சத்திரங்கள் இணைந்தனர் என்றும்,

துருவ் விக்ரமை கட்டிப்பிடித்த இளம்பெண் யார்? வைரலாகும் வீடியோ

 நடிகர் துருவ் விக்ரமை கட்டி பிடித்த இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது