அர்ச்சனா ஆர்மி கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியன் ஆர்மியில் உள்ளவரே பாராட்டிய வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிப்பது, தங்களுக்கு விருப்பத்திற்குரிய போட்டியாளர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ஆர்மியில் அவருடைய புகழை பரப்புவது ஆகியவை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முதல் சீசனில் ஓவியாவுக்கு ஆரம்பித்த இந்த ஆர்மி, அதன் பிறகு அனைத்து சீசனிலும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அர்ச்சனாவுக்கும் இந்த சீசனில் பலர் ஆர்மி ஆரம்பித்த நிலையில் உண்மையிலேயே இந்தியன் ஆர்மியில் உள்ள ஒருவர் அர்ச்சனாவை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் சீசன் 7 நன்றாக சென்று கொண்டிருக்கிறது, அனைத்து போட்டியாளர்களும் நன்றாக விளையாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அந்த அளவில் எனக்கு பிடித்தவர் அர்ச்சனா.

அர்ச்சனா ஏன் பிடித்தது என்றால் ஒரு ஆளை தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்த போது கூட அவர் அசராமல் திரும்பவும் ரீபிளேஸ் செய்தார். அந்த குணம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும் யாரிடமும் பயப்படாமல் அந்த விஷயத்தை அவர் துணிவுடன் கேள்வி கேட்ட குணம் எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு எந்த ஒரு டான்ஸ் ஆக இருந்தாலும், டாஸ்க்காக இருந்தாலும் வலுக்கட்டாயமாக நான் இணைந்து கொள்கிறேன் என்று கை தூக்கினார் அந்த குவாலிட்டி எனக்கு பிடித்திருந்தது. கடைசியாக அர்ச்சனா என்டர்டெயின்மென்ட் செய்வது எனக்கு பிடித்திருந்தது.

நான் பிக் பாஸ் இதுவரை பார்க்காமல் தான் இருந்தேன், ஆனால் அர்ச்சனாவின் கேரக்டர் எனக்கு பிடித்து இருந்தது. இதேபோல் நிறைய விஷயங்கள் அவரை நான் ரசித்ததால் அவர் மீது ஒரு மரியாதை, ஒரு பாசம் வந்தது. நான் அவருக்கு தான் ஓட்டு போட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

இந்த கடலில மீனைவிட அதிகமாக கத்தியும் ரத்தமும் கொட்டிக்கிடக்கு.. அதனால தான் இது செங்கடல்: 'தேவரா' டீசர்..!

கடலுக்கு அடியில் நடக்கும் கத்தி சண்டையால் கடல் ரத்தத்தால் செங்கடலாக மாறும் காட்சிகள் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'ரெமோ' இயக்குனர் அடுத்த படத்தில் இந்த நடிகர் ஹீரோவா? ஆச்சரிய தகவல்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 52 கோடி ரூபாய்  வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வாரத்துல ஜாலி பண்ணலாம்ன்னு நினைச்சேன்.. இப்படி பண்ணிட்டிங்களே: புலம்பிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் 'கடைசி வாரத்தில் ஜாலி பண்ணலாம்ன்னு என்று நினைத்தேன், ஆனால் இப்படி பண்ணிட்டீங்களே பிக்பாஸ்' என மாயா புலம்பும் காட்சிகள் உள்ளன. 

பிரதீப் பாத்ரூமில் தாழ் போடாமல் யூஸ் செய்த விவகாரம்... உண்மையை உளறிய விஷ்ணு-பூர்ணிமா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப், பாத்ரூமை தாழ் போடாமல் பயன்படுத்திய விவகாரம் கமல்ஹாசன் முன்னிலையில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட நிலையில் உண்மை

விஷ்ணு விஷால் அடுத்த படத்தை இயக்கும் விஜய் சேதுபதி-கார்த்தி பட இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.