பாங்காக் நாணயமாற்று நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது!


Send us your feedback to audioarticles@vaarta.com


தாய்லாந்தில் ஒரே நாளில் ஆறு இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி பாங்காக் நகரில்லுள்ள சுராவோங், சிலோம் மற்றும் பேங் ராக் பகுதிகளையொட்டிய ஆறு நாணயமாற்று நிறுவனங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி, ஊழியர்களை மிரட்டி ஒரு லட்சம் பாத்களை கொள்ளையடித்துச் சென்றார். பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் தந்த புகாரின் பேரில் சி சிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிசார் கொள்ளையடித்த நபர் வந்து போன மோட்டார் சைக்கிளை வைத்து அவன் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். 23 வயதான அந்த நபரின் பெயர் சித்திக் அமன் என்றும் அவர் ஒரு இந்தியர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தங்குமிடத்தை சோதனை செய்தபொது கொள்ளையின்போது அவர் அணிந்திருந்த உடைகளும், அறையிலிருந்த 50,000 பாத்களும் கைப்பற்றப்பட்டன. ஆரம்பத்தில் அது தன் சேமிப்பில் உள்ள பணம் என்று நாடகமாடிய அமன் பின்னர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தற்போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது கொள்ளை ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com