close
Choose your channels

ஆக்ரோஷ கேப்டன் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Friday, November 5, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். “ரன் மெஷின்“, “கிங் சேஸிங்“, “ஆக்ரோஷமான கேப்டன்” என ரசிகர்களால் கொண்டாடப்படும் கேப்டன் விராட் கோலிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என உலகம் முழுக்க பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு, அண்டர் 19 வயது கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்று கொடுத்து ஒரேநாளில் இந்தியா முழுக்க பிரபலமானவர் விராட் கோலி. அதற்குப் பின் சச்சின் டெண்டுல்கர் விலகியதை அடுத்து இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றார். அன்றுமுதல் இந்தியாவிற்காக விளையாடிவரும் இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 60% வெற்றிச் சதவீதத்தை வைத்துள்ளார்.

மேலும் இதுவரை 65 டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு கேப்டனாக பதவி வகித்து 38 வெற்றி, 11 டிரா, 16 தோல்வி என இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத ஒரு சாதனையைப் புரிந்துள்ளார். அதேபோல சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர், தற்போது வரை 23,159 சர்வதேச ரன்களை குவித்திருப்பது என இவரது சாதனைகள் ஏராளம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக விராட் கோலி பதவி வகித்துவருகிறார். மேலும் கடந்த சகாப்தங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

இங்கிலாந்தில் 3 டெஸ்ட் வெற்றியைப் பெற்ற முதல் கேப்டன், ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய கேப்டன், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர், ஒருநாள் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர், 20 ஆயிரம் சர்வதேச ரன்களை விரைவாகக் கடந்த வீரர், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை தொடர் நாயகன் விருது வென்றவர் என விராட் கோலியின் சாதனை பட்டியல் ஏராளாம்.

சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்துவரும் இவர் டி20 இந்தியக் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகவுள்ளார்.

தற்போது டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அரைஇறுதிக்குள் இந்திய வீரர்களை அழைத்துச் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.