close
Choose your channels

அமிதாப்பச்சன் குணமடைய வாழ்த்தும் திரையுலக பிரபலங்கள்

Sunday, July 12, 2020 • தமிழ் Comments

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்றிரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அமிதாப் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் ஆகிய இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்பதும், இருவருக்கும் லேசான பாதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமிதாப், அபிஷேக் ஆகிய இருவரும் விரைவில் குணமடைய அவர்களுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் விரைவில் அமிதாப், அபிஷேக் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’விரைவில் குணமடைவீர்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அக்சயகுமார் தனது டுவிட்டரில், ’நீங்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சோனு சூட், விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத்திசிங், மாதவன், எஸ்.ஜே.சூர்யா, அனுபமா பரமேஸ்வரன், சரத்குமார், மம்முட்டி,உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் அமிதாப், அபிஷேக் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz