10 வயது இளையவரான கணவரை பிரியும் 'இந்தியன்' பட நடிகை.. முடிவுக்கு வரும் திருமண உறவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான "இந்தியன்" படத்தில் நடித்த நடிகை, தன்னைவிட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமண உறவு முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான "இந்தியன்" திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா ஆகிய இரண்டு நடிகைகள் நாயகிகளாக நடித்திருந்தனர். இதில் நடிகை ஊர்மிளா பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மோசின் அக்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஊர்மிளாவை விட அவரது கணவருக்கு 10 வயது குறைவு என்பதால் இந்த திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு மாதத்திற்கு முன்பே அவர் மனு தாக்கல் செய்து விட்ட நிலையில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவாகரத்து மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் இருப்பவர் நடிகை ஊர்மிளா. கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments