நடிகை வீட்டில் குண்டு போடலாமே! ஈரானுக்கு யோசனை கூறிய இந்தியர் வேலைநீக்கம்!

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் வீட்டில் கொண்டு போடலாமே என ஈரானுக்கு யோசனை சொன்ன அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பேராசிரியர் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய பேராசிரியர் ஒருவர் அப்படியானால் ஈரானும் அமெரிக்கா மீது கொண்டு போடலாம். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் பகுதியிலும் நடிகை கிம்தர்ஷன் வீட்டிலும் குண்டு போடலாம் என்று விளையாட்டாக தனது முகநூலில் கூறியிருந்தார்.

இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனது கருத்துக்காக அந்த பேராசிரியர் மன்னிப்பு கேட்டார். நகைச்சுவைக்காக இந்த கருத்தை தெரிவித்ததாக அவர் கூறிய போதிலும் அவரது இந்த கருத்து அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எதிரானது என்று கூறி அவரை வேலையைவிட்டு கல்லூரி நிர்வாகம் நீக்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.