வெறும் 5 நிமிஷத்துல கொரோனா கண்டறியும் முறை… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,December 10 2020]

 

கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சோதனை முறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான திபஞ்சன் பான் என்பவரின் தலைமையிலான குழு கண்டுபிடித்து உள்ளது.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான ஆராய்ச்சி குழு வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் சோதனை முறை ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது காகித அடிப்படையிலானது என்றும் கிராபினை கொண்டு மின்வேதியியல் சென்சார் தொடுதிறன் மூலம் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை கொரோனா பரிசோதனை முறைக்கு ஆர்.என்.ஏ முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனை முறையில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள பல மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் புதிய கண்டுபிடிப்பின் மூலம் வெறும் 5 நிமிடத்தில் கொரோனா மூலக்கூறு கொண்ட மாதிரியை மிக எளிமையாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,164 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே அதிகமான கொரோனா உயிரிழப்பு அமெரிக்காவில்தான் பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக பிரேசில்-1,79,032, இந்தியா- 1,41,360, மெக்சிகோ – 1,10,874, இங்கிலாந்து – 62,566, இத்தாலி- 61,739, பிரான்ஸ்- 56,648, ஈரான்- 51,212, ஸ்பெயின் – 47,019 போன்ற நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

More News

சித்ரா தற்கொலை வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்: விசாரணையில் திருப்பம் ஏற்படுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

கோலிவுட் திரையுலகில் காதலர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள்

அவன் எல்லாம் ஒரு ஆளு: அர்ச்சனாவுக்கு ஒரு குறும்படம் உண்டா கமல் சார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் தொடங்கிய புதிய மனிதா என்ற டாஸ்க்கில் தனது அப்பா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறி தன்னை மனவருத்தம் செய்துவிட்டதாக நிஷா மீது குற்றஞ்சாட்டி

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஆர்யாவின் அடுத்த படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இருப்பினும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம்

ஆர்யாவுக்கு கிடைத்த ஆஸ்காருக்கு இணையான பரிசு: வைரலாகும் புகைப்படங்கள்!

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'சார்பாட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது