சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள். பலமணிநேர வரிசைகள், வங்கி ஊழியர்களின் அலட்சியத்தனம் ஆகியவை பொதுமக்களை படாதபாடு படுத்திவிட்டன. ஒருவழியாக இப்போதுதான் அனைத்து ஏடிஎம்களும் இயங்கி அப்பாடா..என்று சொல்லும் நேரத்தில் திடீரென தனியார் வங்கிகளும், எஸ்பிஐ வங்கியும் அதிக தொகையில் மினிமம் பேலன்ஸ், மினிமம் பேலன்ஸை பராமரிக்கவிட்டால் அபராதம், 4 முறைக்கு மேல் பணப்பட்டுவாடா செய்தால் கட்டணம் என புதுப்புது கண்டிஷன்கள் போட்டு வாடிக்கையாளர்களின் பணத்துக்கு வேட்டு வைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறது போஸ்டல் பேங்க் என்னும் தபால் நிலைய வங்கிகள்
ஏப்ரல் 1 முதல் தொடங்கவுள்ள போஸ்டல் வங்கியில் ரூ.100 மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதும், எத்தனை முறை பணப்பரிமாற்றம் செய்தாலும் கட்டணம் இல்லை. அதுமட்டுமின்றி ஏடிஎம் கார்டு, செக்புக் வசதி, நெட்பேங்கிங் வசதி, போஸ்டல் பேங்க் ஏடிம் கார்டு மூலம் எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி என வங்கிகள் தரும் அனைத்து சேவைகளும் அடங்கியுள்ளது. வெளிநாட்டு தனியார் வங்கிகள் போல் மறைமுக கட்டணங்கள் வசூலித்து நம் பணத்திற்கு வேட்டு வைக்காமல் உண்மையாக சேவை செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ள போஸ்டல் வங்கி நிச்சயம் அனைத்து தரப்பினர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வங்கி வர்த்தகத்தில் இணைவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஏற்கனவே தபால் துறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வங்கி கணக்குகள் பெறப்பட்டால்தான் வங்கி வர்த்தகத்தை தொடங்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. எனவே, மக்களிடம் இருந்து கணக்குகளைப் பெறுவதற்கு தபால்துறை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அரசு அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று, விண்ணப்பங்களைக் கொடுத்து கணக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.
தபால் துறையின் வங்கி சேவைக்கு, “போஸ்டல் பேங்க்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையை வரும் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு ஆதார் அட்டை போன்ற ஏதாவது அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொடுத்தால் போதும். குறைந்தபட்ச அளவாக ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும். அதை விண்ணப்பத்துடன் தரவேண்டும்.
இதில் சேர்பவர்களுக்கு ஏ.டி.எம். அட்டை, ரகசிய எண், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றை தபால்துறை வழங்கும். தபால்துறை வங்கி வழங்கும் ஏ.டி.எம். அட்டை மூலம் வேறு எந்த வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் பணம் எடுக்க முடியும். இதற்கு 4 ஆண்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது. அதோடு நெட் பாங்கிங்' வசதியும் செய்து தரப்படும்.
மற்ற வங்கியில் நடக்கும் பணப்பரிமாற்றம் போலவே இந்தியா முழுவதிலும் “போஸ்டல் பேங்க்” மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். தபால் அலுவலகத்தில் போஸ்டல் பேங்க்'க்காக தனி இடம் அளிக்கப்பட்டு இருக்கும். தபால்துறையின் மற்ற சேவைகளும் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

More News

ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும்.

இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?

மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்.

நான் சொல்லாத விஷயத்தை எழுதி வரும் உப்புமா இணையதளங்கள். நடிகை கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் நடிகை கஸ்தூரி கூறியதாக ஒருசில இணையதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது. சுசித்ரா டுவிட்டர் பிரச்சனைக்கு இணையாக இந்த செய்தி மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...