ஏரியுடன் கூடிய தீவை விலைக்கு வாங்கிய பிரபல பாடகர்.. வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Thursday,September 29 2022]

பிரபல பாடகர் ஒருவர் ஏரியுடன் கூடிய தீவை சொந்தமாக விலைக்கு வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பஞ்சாபி பாடகர் மிகாசிங், ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பதும் அவரது பாடல்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகர் மிகாசிங் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த தீவில் ஒரு ஏரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏரியுடன் கூடிய இந்த தீவில் 7 படகுகள் மற்றும் 10 குதிரைகளும் உள்ளன என்பதும் தெரிய வருகிறது.

பாடகர் மிகா சிங் தான் வாங்கிய ஏரியுடன் கூடிய தீவின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஏரியில் விசைப்படகில் செல்லும் காட்சிகள் உள்ளன.

இருப்பினும் பாடகர் மிகாசிங் வாங்கிய தீவு இருக்கும் இடம் மற்றும் அதன் மதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்தியாவிலேயே சொந்தமாக தீவு வைத்திருக்கும் முதல் பாடகர் மிகா சிங் என்றும் கூறப்படும் நிலையில் அவர் தான் உண்மையிலேயே அரசர் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

More News

சமந்தாவின் 'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்களுக்கு செம விருந்து!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்வதாக

மாலையும் கழுத்துமாய் 'சீதா ராமம்' மிருணாள் தாக்கூர்: செம ஹாட் புகைப்படங்கள்!

'சீதா ராமம்'திரைப்படத்தில் இளவரசியாக நடித்த மிருணாள் தாக்கூர், மாலையும் கழுத்துமாக உள்ள கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரானுக் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல்

'பொன்னியின் செல்வன்' குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா போட்ட டுவிட்.. பதில் கூறிய லைகா!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது

நாளை 'பொன்னியின் செல்வன்' பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை நாளை திரையரங்குகளில் பார்க்கும் கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.