close
Choose your channels

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

Friday, August 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டிகளில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் ஆரம்பத்தில் பிரிட்டன் அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு முன்னிலையில் இருந்தாலும் இந்திய அணியின் வீராங்கனைக குர்ஜித் கவுர் 25 மற்றும் 26 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார். மேலும் வந்தனாவின் முயற்சியால் இந்திய அணிக்கு இன்னொரு கோல் கிடைத்ததால் போட்டியின் முதல் பாதியின் முடிவில் 3-2 என இந்திய அணி முன்னிலை பெற்றது

ஆனால் பிரிட்டன் அணி கேப்டன் அதிரடியாக ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்த நிலையில் கடைசி கால்பாதியில் இன்னொரு கோல் அடித்த பிரிட்டன் 4-3 என கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து போட்டியின் முடிவில், 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டி சென்றது. இருப்பினும் கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.