close
Choose your channels

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்!

Sunday, November 29, 2020 • தமிழ் Comments

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி 390 இந்த இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பரபரப்பாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மைதானத்தில் விளையாட்டை நேரில் பார்த்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர் ஒருவர் தான் காதலித்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை புரபோஸ் செய்கிறார்

மோதிரத்தை கொடுத்து அவர் புரபோஸ் செய்வதும், அதனை பார்த்து அந்த இளம்பெண் ஆச்சரியத்துடன் அவரது காதலை வெட்கத்துடன் ஏற்றுக்கொண்ட காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன

இந்திய இளைஞரிடம் இருந்து மோதிரத்தை பெற்றுக் கொண்ட அந்த ஆஸ்திரேலிய பெண் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த காதல் காட்சியை மைதானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களும் வீரர்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz