close
Choose your channels
viswasam

'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக உள்ளார்.

குறிப்பாக இந்த படத்தின் லொகேஷன்களை தேர்வு செய்து வருவதற்காக அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். தாய்லாந்து உள்பட உலகின் எட்டு நாடுகளில் இந்த படத்தின் கதை நகர்வதாகவும், அதற்கு தகுந்த லொகேஷன்களை ஷங்கருடன் படக்குழுவினர் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ளதாக இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு அழகிய கட்டிடம் முன் ஷங்கர் இருப்பது போன்று உள்ளது. இதே போல் இன்னும் பல ஆச்சரியத்தக்க வகையில் இந்த படத்தின் லொகேஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சிம்பு உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.