இளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்!!!

 

 

ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இணைந்து பணியாற்ற இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். அவருக்கு வயது 36 என்பதும் குறிப்பிடத்தக்கது . மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த இளைஞரின் தந்தையான நரேந்திர மேனனும் நடுவராக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர். நிதின் மேனன் தற்போது ஐசிசி எலைட் நடுவர் குழுவில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருகிறார் என்பது இந்தியர்கள் மத்தியில் பெருமை பாராட்டும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

நடுவராகப் பொறுப்பு வகிப்பதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவுடன் காணப்படுகின்றனர் எனத் தொடர்ந்து விமர்ச்சிக்கப் பட்டு வருகிறது. அத்தகைய நேரங்களிலும் நிதின் மேனன் மீதான பார்வை  சர்வதேச அளவில் ஏற்றத்துடனே காணப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐசிசி எலைட் பிரிவில் நடுவராக பொறுப்பு வகிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் கேப்டன் வெங்கட் ராகவன் மற்றும் சுந்தரம் ரவி ஆகியோர்களைத் தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் தற்போது சர்வதேச போட்டிகளில் நடுவராக பதவி வகிக்கப் போகிறார்.

அடுத்த ஆண்டு நடைபெற போகும் ஆஷ்ஸ் தொடரிவில் இவர் நடுவராக பணியாற்றப் போகிறார் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற போகும் 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்ற இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தை இவர் மத்தியப்பிரதேச A அணிக்காக 13 ஆண்டுகள் பேட்ஸ்மேனாக விளையாடி இருக்கிறார். பின்பு 2015 முதல் ரஞ்சி டிராபி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றத் தொடங்கி விட்டார். 2017 இல் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் சர்வதேச நடுவராகவும் பணியாற்றினார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும் 16 டி-20 போட்டிகளில் பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென மருத்துவ விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர்: என்ன காரணம்?

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக

அமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

கொரோனாவே இன்னும் போகல... அதுக்குள்ள இன்னொரு பெருந்தொற்றா??? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

சீனாவின்  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது.

சாத்தான்குளம் வழக்கு: மதுரை ஐகோர்ட்டின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளால் பரபரப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள்

சென்னையில் காலை 8 மணிக்குள் 18 பேர் பலி: கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தினந்தோறும் ஆயிரத்துக்கு உள்ளானவர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால்