ஹீரோ, ஹீரோயின் இசையமைப்பாளர் என யாரும் இல்லை.. வெறும் 10 லட்சத்தில் ஒரு AI திரைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டில் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், இயக்குனர் ஆகியோர்களுக்கான சம்பளமே பாதிக்கு மேல் சென்றுவிடும். என்பதால்தான் தற்போது படம் தயாரிப்பது மிகப்பெரிய செலவாக உள்ளது. ஆனால் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் என யாருமே இல்லாமல் வெறும் AI டெக்னாலஜியை வைத்து 10 லட்சம் ரூபாயில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் AI டெக்னாலஜி கலைஞர்களுடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். 95 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்திற்கு சென்சார் போர்டு "யு/ஏ" சான்றிதழ் அளித்துள்ளது. "லவ் யூ" என்று இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
30 AI கருவிகளை இந்த படத்திற்காக நரசிம்ம மூர்த்தி பயன்படுத்தி இருப்பதாகவும், மேலும் இந்த படத்தை வெறும் ஆறு மாதத்தில் உருவாக்கி முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் AI திரைப்படம்" என அழைக்கப்படும் இந்த படம் கன்னடத்தில் உருவாகியுள்ள நிலையில், விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் இதே போல் ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் வெறும் லட்சங்களில் திரைப்படங்கள் அதிகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments