என்கவுண்டர் செய்த போலீசார்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,December 06 2019]

ஹைதராபாத் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த நான்கு பேர்களை இன்று அதிகாலை தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீஸார்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் போலீசார்களை பாராட்டிய சம்பவங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பொதுமக்கள் போலீசாருக்கு இனிப்பு கொடுத்து பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த என்கவுன்ட்டர் குறித்து தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்த போதிலும், பொதுமக்கள் மற்றும் பெண்ணியவாதிகள் இடமிருந்து பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் செல்பார் என்பவர் சற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி என்கவுண்டரில் ஈடுபட்ட தெலுங்கானா போலீசார் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் தனது நிறுவனத்தின் சார்பில் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.