கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்!!!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

 

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா? எனக் கேலியாக ஒரு பழமொழி நம்ம ஊர் வழக்கத்தில் உண்டு. உண்மையிலேயே இந்தோனேசியாவில் வாழும் ஒரு இளைஞருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் கொட்டி இருக்கிறது. சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்த அந்த இளைஞர் தன் வீட்டு கூரையின் மீது விழுந்த ஒரு விண்கல்லால் ஒரே நாளில் 1.4 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசுவா ஹூடகலூஸ்(33). இவர் அப்பகுதியில் இறந்தவர்களை புதைப்பதற்கு பயன்படுத்தும் சவப்பெட்டியை செய்து விற்று வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் இவர் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அவரது வீட்டின் முன்கூரை இடிந்த விழுவது போல பயங்கரச் சத்தம் கேட்டு இருக்கிறது. இந்தச் சத்தத்தை அவரது அக்கம் பக்கத்து வீட்டாரும் கேட்டு பயந்து இருக்கின்றனர்.

இதனால் வீட்டின் முன்கூரை பகுதிக்கு வந்த ஜோசுவா 2.1 கிலோ எடை கொண்ட ஒரு விண்கல் 15 செ.மீ ஆழத்தில் விழுந்ததைப் பார்த்து அதைத் தோண்டி எடுத்து இருக்கிறார். மேலும் தான் தோண்டியபோதும் அது சூடாக இருந்தது எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதை அமெரிக்காவைச் சேர்ந்த வித்தியாசமான பொருட்களை சேகரிக்கும் ஜோட் காலின்ஸ் என்பவர் பாத்ததோடு, இந்தப் பொருளை வாங்கிக் கொள்ள விரும்புகிறேன், மேலும் இதை நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என ஜோசுவாவிடம் தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து நேரில் வந்த காலின்ஸ் இந்த விண்கல் கார்பனேசிய சோன்டைன்ட் எனும் வித்தியமான வகையைச் சேர்ந்தது. மேலும் இதற்கு 4.5 பில்லியன் வயது இருக்கலாம். இது கிடைப்பதே அரிது எனவே நான் இதை விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என 1.4 மில்லியன் டாலரை கொடுத்து ஜோசுவாவிடம் இருந்து வாங்கிச் சென்றுள்ளார். 2.1 கிலோ எடை கொண்ட இந்த விண்கல்லின் ஒரு கிராம் இந்திய மதிப்பு 63 ஆயிரம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. டாலர் மதிப்பில் 857 டாலர் என்பதும் குறிப்பிடத்தக்ககது. இந்நிலையில் ஒரே நாளில் கோடீஸ்வரரான ஜோசுவாவைப் பார்த்து பலரும் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.

More News

வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!

மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது.

எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க: விஜய் நண்பரின் மனைவி!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ்

'I am Back'ன்னு சொல்லுங்க: தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்!

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வில்லன் நடிகராக அறிமுகமாகும் இணை இயக்குனர்!

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் டிபி கஜேந்திரன்.