close
Choose your channels

இப்படியுமா? தன் முழங்காலையே சமைத்துச் சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் பற்றிய தகவல்!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன் உடலில் இருந்து அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட்ட பகுதியை சமைத்து உணவாகச் சாப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் குறித்த தகவல் தற்போது பலரையும் பதைக்க வைத்து இருக்கிறது.

ஸ்பானிஷ் நாட்டில் வசித்துவரும் பவுலா கோனு எனும் 30 வயது பெண்மணிக்கு முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அப்போது அவருடைய முழங்காலில் இருந்து மெனிஸ்கஸ் எனப்படும் மென்மையான குருத்தெலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும் இதைப் பத்திரப்படுத்த வேண்டுமா? என மருத்துவர்கள் கேட்டபோது, அதை ஆல்ஹாலில் வைத்து வீட்டிற்கே எடுத்து வந்திருக்கிறார் பவுலா.

இந்நிலையில் இன்ஸ்டாவில் 2 மில்லியன் பார்வையாளர்களுடன் பிரபலமாக இருந்துவரும் பவுலா தன் காதலரிடம் தன்னுடைய முழங்கால் பகுதியைச் சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் அது என்னுடையது தானே என்று அவரை சம்மதிக்கவும் வைத்திருக்கிறார். இதையடுத்து ஸ்பாகெட்டி போலேக்னீஸ் எனப்படும் பாஸ்தாவை சமைத்த பவுலா அதறாகத் தயார் செய்யப்பட்ட சாஸில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட தனது முழங்கால் பகுதியைச் சேர்த்தே சமைத்திருக்கிறார்.

இப்படி சமைக்கப்பட்ட உணவை பவுலா கோனு மற்றும் அவருடைய காதலர் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர். லைஃப் ஸ்டைல் குறித்த பதிவுகளை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் பவுலா, எப்போதும் போல தாங்கள் சாப்பிட்ட இந்த வீடியோவையும் பதிவிட்ட நிலையில் சமூகவலைத் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக நரமாமிசம் சாப்பிடுவது தவறாகக் கருதப்பட்டாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இதற்கு கடுமையான சட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் அவ்வபோது இறந்த உடல்களின் நரமாமிசங்களை சமைத்துச் சாப்பிடுவது குறித்த தகவல்கள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.