நட்சத்திர திருமணம்- குதிரையேற்ற வீரரை கைப்பிடித்த பில்கேட்ஸின் மகள்!

உலகத்தின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ்(28) விளையாட்டு வீரரான நெயில் நாசர்(30) என்பவரை காதலித்து இந்த மாதம் அக்டோபர் 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணத்தில் பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் இருவரும் கலந்து கொண்டனர்.

உலகின் 4 ஆவது பணக்காரராக இருந்துவரும் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் கடந்த மே மாதம் தங்களது 27 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 3 வாரிசுகள் உள்ள நிலையில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் எகிப்து நாட்டைச் சேர்ந்த Equestrian குதிரையேற்ற வீரர் நெயில் நாசர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் நியூயார்க்கில் உள்ள ஒரு குதிரைப் பண்ணையில் எளிமையாக நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த விழாவில் பில்கேட்ஸ்- மெலிண்டா கேட்ஸ் இருவரும் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியுள்ளனர்.

கொரோனா காலத்தில் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடியாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தனது மூத்த மகள் ஜெனிபருக்கு பில்கேட்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு நியூயார்க்கில் 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரைப் பண்ணையை பரிசாக அளித்துள்ளார். காரணம் ஜெனிபரும் ஒரு தேர்ந்த குதிரையேற்ற வீரர். இவர் தனது 6 வயதில் இருந்தே குதிரையேற்றத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதைத்தவிர ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் பட்டம் வென்ற நெயில் நாசரை அதே பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனித உயிரியியல் துறையில் பட்டம் பெற்ற ஜெனிபர் கேட்ஸ் சந்தித்துள்ளார். மேலும் குதிரையேற்றத்தில் இருவருக்கும் ஆர்வம் இருந்த நிலையில் இவர்களது மனமும் ஒன்றுபட்டிருக்கிறது. இதையடுத்து கடந்த ஜனவரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

நெயில் நாசர் 2013, 2014, 2017 என 3 முறை உலகக் கோப்பை போட்டிக்கு குதிரையேற்றப் பிரிவில் தகுதிப் பெற்ற ஒரு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதே இவருடைய கனவாக இருக்கிறது. இதைத்தவிர Nassar stables LLL எனும் வணிக நிறுவனத்தையும் இவர் துவங்கி நடத்தி வருகிறார். அதேபோல ஜெனிபர் எவர்கேட் ஸ்டேபில்ஸ் எனும் நிறுவனத்தை நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CVL0CeoAQTa/

More News

பிரியங்கா குரூப்புக்கு இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு போல! கமலின் ஆவேச புரமோ

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கமல்ஹாசன் வரும் நாள் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை செய்யப்போகும் படத்தை முதன்முதலில் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமைக்குரிய சாதனையை செய்ய போகும் 'இரவின் நிழல்' என்ற படத்தை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் முதன்முதலில் பார்த்ததாக இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

கொரோனா பரவலை தடுக்க புது டெக்னிக்… அசத்தல் ஐடியாவிற்கு குவியும் பாராட்டு!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆடம்பர உணவகம் ஒன்றில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு, விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்ட

கொரோனாவின் அடுத்த அவதாரம்… புது வேரியண்ட் பரவுவதாக WHO எச்சரிக்கை!

டெல்டா வகை கொரோனா வைரஸின் மாறுபாடு கொண்ட AY 4.2 எனும் புதிய வேரியண்ட்

சமந்தாவின் இதயத்தில் சிறப்பு இடம் பிடித்தது என்ன தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா தனது இதயத்தில் சிறப்பு இடம் பிடித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.