எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வைத்துதான் பழக்கம். 'புலி' இசைவிழாவில் விஜய்

  • IndiaGlitz, [Monday,August 03 2015]

இளையதளபதி நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சிம்புதேவன், நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிகுமார், டி.ராஜேந்தர், ஜீவா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்பட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவில் பேசியவர்களின் தொகுப்பு:

இளையதளபதி விஜய்: எனக்கு உண்மையாக ஒருவரை வெறுக்க தெரியும். ஆனால் பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது. பைரஸிங்கிறது. பிரசவம் ஆகிற குழந்தையை சிசேரியன் பண்ணி கொல்றதுக்கு சமம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும். எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம். என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கிறது. அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. பின்னாடி பேசறவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய தோல்வியில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன்

இந்த விழாவில் டி.ராஜேந்தர் அவர்களின் பேச்சு பெரும் மாஸ் ஆக இருந்தது. அவர் பேசியதில் இருந்து ஒருசில துளிகள்: "விஜய் ஒரு தூய உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு தமிழனின் மனதிலும் அவர் நிற்கிறார். விஜய் எனக்கு புடிச்ச ஒரு தமிழன். நல்ல நண்பன். விஜய்கிட்ட இருக்கிறது நட்பு, நான் பார்க்கல அவர்கிட்ட தப்பு. சிம்புவுக்கு ஒரு அண்ணா மாதிரி இருக்கிறது விஜய் தான். இதான் உண்மை. உணவு நல்லா இருக்கணும்ன்னா தேவை உப்பு, உறவு நல்லா இருக்க தேவை நட்பு. தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி என தனது வழக்கமான பஞ்ச் டயலாக்குகளை வரிசையாக பேசத் தொடங்கினார்.

விநியோகிஸ்தர் காஸ்மோ சிவா: நான் இதுவரை எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. ஆனால் நான் விஜய் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்.

நந்திதா ஸ்வேதா: 'புலி' படத்தில் 'குமுதா' என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த சிம்புதேவனுக்கு நன்றி. விஜய்யுடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வைரமுத்து: தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், கமல்ஹாசனுக்கு பின்னர் திரைப்படங்களில் பாடும் ஒரு நடிகர் விஜய்தான்.

ஸ்ரீதேவி: நான் மும்பைவாசியாக மாறிவிட்டாலும், நான் எப்போதுமே தமிழகத்தின் மகள்தான். தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு.

தேவிஸ்ரீ பிரசாத்: எனது டியூனில் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் பாடியதற்கு மிகவும் நன்றி. ஏண்டி ஏண்டி பாடல் சூப்பர் ஹிட் ஆகும். இந்த விழா எனக்கு ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசு.

சிம்புதேவன்: இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க நான் ஸ்ரீதேவியை முதன்முதலில் அணுகியபோது, விஜய்யுடன் பணிபுரியவுள்ளதால் கண்டிப்பாக இந்த வாய்ப்பை பரிசீலனை செய்கிறேன் என்று கூறினார். புலி' படத்தில் கதை மட்டுமே நான் எழுதியுள்ளேன். ஆனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியற்கு விஜய்தான் காரணம்.

எஸ்.ஏ.சந்திரசேகர்: விஜய்யின் வளர்ச்சிக்கு நான் அடித்தளம் மட்டுமே போட்டேன். விஜய்யின் இந்த உயரமான வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குனர்களுக்கு எனது நன்றி.

பேரரசு: வாலுக்கு மட்டுமில்லை, தல'க்கும் சப்போர்ட் செய்பவர் விஜய்

ஸ்ருதிஹாசன்: நான் சினிமாவில் நுழையும்போது ஒரு படத்திலாவது விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

எஸ்.ஜே.சூர்யா: நன்றியின் மறுபெயர் விஜய். புலி' என்ற டைட்டில் இளையதளபதிக்கு மட்டுமே பொருந்தும்.

More News

Bollywood chasing Rajamouli

Rajamouli is the man of the moment. Undoubtedly the super success of Baahubali has made the ace filmmaker the most sought after director in Bollywood. And it’s pretty apparent that top producers and production houses including Karan Johar, Sajid Nadiadwala, Madhu Manthena, etc are papering and wooing our ‘Jakkanna’ to make films for them.

Vijay Sethupathi to work with this talented director again

Delighted with the outcome and response to his recent film and maiden production venture ‘Orange Mutai’, talented actor Vijay Sethupathi has decided to work again in a film with its director Biju Vishwanath and the latter has confirmed this piece of information as true. .......

Shah Rukh Khan heaps praises on 'Baahubali'

Bollywood actor Shah Rukh Khan is the latest to join the list of celebs to appreciate Baahubali. After watching Rajamouli’s epic drama, the superstar could not stop raving about the film and thanked the unit for inspiring.

Aishwarya's role in horror film

Young actress Aishwarya Rajesh who rose to fame with the recent super hit and highly acclaimed ‘Kaakka Muttai’ is acting in a ‘Hello Naan Thaan Pei Pesurenm’ roduced by Sundar.C. However she is not playing a ghost in the film as the teaser suggested.......

Gautham is a good boy; Sitara is a little naughty: Mahesh Babu

Mahesh Babu gets talking about his forthcoming release Srimanthudu, being a producer and his kids.