'சிவாஜி' பாணியில் 'தர்பாரில்' ஒரு தரமான சம்பவம்: ஏ.ஆர்.,முருகதாஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 15 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியிட்டுள்ளார்.

'தர்பார்' படத்தில் பாடலுடன் கூடிய சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ஒரே நேரத்தில் ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் படப்பிடிப்புக்கு வருகை தந்திருப்பதாகவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு இதே ஜூன் 15ஆம் தேதி தான் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 'அதிரடி தான் மச்சான் மச்சான்' என்ற பாடல் ஸ்டண்ட் காட்சிகளுடன் இருக்கும். சரியாக 12 ஆண்டுகள் கழித்தே இதேபோன்ற ஒரு சண்டைக்காட்சிகளுடன் கூடிய பாடல் காட்சி ரஜினி படத்தில் இன்று படமாக்கப்படுகிறது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத்தின் அட்டகாசமான இசையில் பாடலுடன் கூடிய ஃபைட் காட்சியை திரையில் காண ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More News

ஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்!

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவில் சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவர்

'மாநாடு'க்கு முன் சிம்பு நடிக்கும் புதிய படம்: படப்பிடிப்பு தொடங்கியது

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்கவுள்ளது

விமான பைலட்டை திருமணம் செய்த பிக்பாஸ் புகழ் நடிகை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 1' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வைஷ்ணவி. இவர் கடந்த சில ஆண்டுகளாக அஞ்சன் என்ற விமான பைலட்டை காதலித்து வந்த நிலையில்

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த இளம் நடிகை

துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மெஹ்ரின் பிர்ஜதா ஒப்பந்தமாகியுள்ளார்.