ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த தங்கராசு டி. நடராஜனை ரூ.3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு தமிழக பிரிமியர் லீக் மற்றும் ரஞ்சி போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தவர். இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி ஏற்பட்டது. ஆரம்பத்தொகை ரூ.10 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டாலும் கடும் போட்டி காரணமாக ரூ.3 கோடிக்கு புனே அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணி நிலவரப்படி அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று காலை முதல் நடந்து வரும் ஏலத்தில் இந்தியாவின் இஷாந்த் சர்மா, இலங்கை கேப்டன் மேத்யூஸ், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோர்கள் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் போனார்கள். மேலும் புனே அணி இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

More News

மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு

தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.

பாவனா விவகாரம்: கேரள முதல்வருக்கு நடிகர் விஷால் எழுதிய அவசர கடிதம்

நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த அசம்பாவித சம்பவத்தால் கேரள திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

வரவேற்கப்படும் 11 . ஓடி ஒளியும் 122

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்றபோது பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ராகவா லாரன்ஸின் அன்புக்கோரிக்கை

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கோலிவுட்டில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது.