ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது என தெரிந்ததே. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மார்ச் 23 முதல் மே 5ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த அட்டவணையின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டி நடக்கும் தேதிகள் பின்வருமாறு:

மார்ச் 23: சென்னை vs பெங்களூர் போட்டி நடைபெறும் இடம்: சென்னை

மார்ச் 26: சென்னை vs டெல்லி போட்டி நடைபெறும் இடம்: டெல்லி

மார்ச் 31: சென்னை vs ராஜஸ்தான் போட்டி நடைபெறும் இடம்: சென்னை

ஏப்ரல் 3: சென்னை vs மும்பை போட்டி நடைபெறும் இடம்: மும்பை

ஏப்ரல் 6: சென்னை vs பஞ்சாப் போட்டி நடைபெறும் இடம்: பஞ்சாப்

ஏப்ரல் 9: சென்னை vs கொல்கொத்தா போட்டி நடைபெறும் இடம்: சென்னை

ஏப்ரல் 11: சென்னை vs ராஜஸ்தான் போட்டி நடைபெறும் இடம்: ராஜஸ்தான்

ஏப்ரல் 14: சென்னை vs கொல்கத்தா போட்டி நடைபெறும் இடம்: கொல்கத்தா

ஏப்ரல் 17: சென்னை vs ஐதராபாத் போட்டி நடைபெறும் இடம்: ஐதராபாத்

ஏப்ரல் 21: சென்னை vs பெங்களூர் போட்டி நடைபெறும் இடம்: பெங்களூர்

ஏப்ரல் 23: சென்னை vs ஐதராபாத் போட்டி நடைபெறும் இடம்: சென்னை

ஏப்ரல் 26: சென்னை vs மும்பை போட்டி நடைபெறும் இடம்: சென்னை

மே 1: சென்னை vs டெல்லி போட்டி நடைபெறும் இடம்: சென்னை

மே 5: சென்னை vs பஞ்சாப் போட்டி நடைபெறும் இடம்: பஞ்சாப்