ஐபிஎல் 2021- இல் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யார்?

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்து ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தல தோனியை கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் சிஎஸ்கே ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் நடந்த சில சாதனைகள் ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கின்றன.

ஒரே மேட்சில் அதிக ரன்களை அடித்தவராக ஜோஸ் பட்லர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஒரு போட்டியில் 124 ரன்களை அடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் சிஎஸ்கேவை சேர்ந்த இரு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதில் ருத்ராஜ் கெயிக்வாட் 16 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 633 ரன்களை குவித்துள்ளார். இவரைப் போலவே மற்றொரு வீரரான டூபிளசிஸ் கடுமையான டஃப் கொடுத்து 16 போட்டிகளில் 633 ரன்களை குவித்துள்ளார்.

இதற்கு முன்பு பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 626 ரன்களை குவித்திருந்தார். இதனால் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற முறையில் ஆரஞ்சு நிற தொப்பியை தனக்கு சொந்தமாக்கி இருந்தார். தற்போது ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் டூபிளசிஸ் ஆகிய இருவரும் இந்த சாதனையை முறியடித்து கே.எல்.ராகுலிடம் இருந்து ஆரஞ்ச் தொப்பியை பறித்துள்ளனர்.

2021 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பெங்களூரு அணியைச் சேர்ந்த ஹர்சல் படேல் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து டெல்லி வீரர் ஆவேஷ்கான் 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டு உள்ளன. சென்னை வீரர் ருத்ராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல் ஆகிய நால்வரும் இநத் ஐபிஎல் போட்டியில் அதிரடி சதத்தை அடித்தள்ளனர். இதில் தேவ்தத் 51 பந்துகளில் சதத்தை அடித்து அசத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தவிர மும்பை வீரர் இஷான் கிஷன் 16 பந்துகளில் அதிவேகமாக அரைசதத்தை அடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்தவர்கள் பட்டியலில் ஹெட்மயர் 168.05 வைத்துள்ளார். மேலும் ஹர்ஷல் படேல் வீசிய ஒரு ஓவரில் ஜடேஜா 37 ரன்களை குவித்துள்ளார். இது ஒரு ஓவரில் அடித்த அதிகப்பட்ச ரன்களாக இருக்கிறது. மேலும் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 2 மெய்டன்களை வீசியுள்ளார்.

இந்தத் தொடரை பொறுத்தவரை ஆவேஷ்கான் 61 ஓவர்கள் வீசி 156 பந்துகளை டாட் பாலாக வீசியுள்ளார். மேலும் இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 30 சிக்ஸர்களை அடித்து பந்தை பறக்க விட்டதும் குறிப்பிடத்தக்கது.

More News

'அண்ணாத்த' படத்தின் சென்சார் தகவல்: அட்டகாசமான போஸ்டர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா? பரிசுகள் விபரங்கள்!

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில்

வீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா? ருசியான ஸ்நாக்ஸ் ரெடி!

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் முடிந்து எல்லா வீடுகளிலும் பொரி,

மாஸ் காட்டிய தோனி… சிஎஸ்கே ரசிகர்களை குளிர வைக்கும் இன்னொரு வரலாற்று சம்பவம்!

ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணிக்கும் கொல்கத்தா

ஆரஞ்சு உடையில் அசத்தும் பேரழகி… நடிகை மாளவிகா மோகனன் கிளாமர் பிக் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்