ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்

மானத்தைக் காக்கும் போராட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணி ரசிகர்களின் நம்பிக்கையைப் பெறக் கட்டாயம் மீண்டு வர வேண்டிய இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அறிவித்தது முதலே மூன்று முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடரைத் துவங்கிய சென்னை அணி அதன்பிறகு அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதை எத்தனை வியூகங்கள், திட்டங்கள், சோதனைகள் என அனுபவ தோனி முயற்சித்த போதும் எதுவும் பலன் அளிக்கவில்லை.

பேட்டிங் சொதப்பல்

துவக்கத்தில் பேட்டிங்கில் சீனியர்களை அதிகம் சார்ந்திருந்த சென்னை அணி, அவர்களை நம்பி மோசம்போனது மட்டுமே மிச்சமானது. ப்ளே ஆஃப் வாய்ப்பு கைநழுவிச் சென்ற பின் இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு அளித்தார். ஆனால் அதையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அதே நேரம் நீண்ட காலமாகக் காத்திருந்து, வந்த முதல் போட்டியிலேயே அவர்கள் சாதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் நியாயமல்ல. அதனால் முன்பே இந்த முயற்சியை தோனி செய்திருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. அதாவது 5ஆவது போட்டிக்குப் பிறகே இதுபோன்ற முயற்சிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.

எதிர்காலம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரையில் இந்த சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் இனி அந்த அணி எதிர்காலத்தில் பழைய பலத்துடன் களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளது. தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கையில் தற்போதுள்ள சீனியர் வீரர்கள் கூட்டம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மெகா ஏலத்துக்கு முன்பாகவே கலைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை களமிறங்காத ஆசிப், மிட்சல் சாண்ட்னர் ஆகியோர் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. இதைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் உறுதி செய்துள்ளார்.

ஒரே ஒரு சாதனை மட்டும்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி, இதுவரை இல்லாத சரிவு எனப் பல வேதனைகளை சென்னை அணி சந்தித்துள்ள போதும் ஒரே ஒரு சாதனையை மட்டும் இதுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அது ஒரு சீசனில் ஒரே அணிக்கு எதிராக இரண்டு தோல்விகளை சந்தித்ததில்லை. இந்த ஆறுதல் சாதனையை இந்த மோசமான சீசனிலும் தக்கவைத்துள்ள சென்னை, இன்றும் அதைக் காப்பாற்றும் என நம்பலாம்.

பலமான அணி

மறுபுறம் பெங்களூர் அணியைப் பொருத்தவரையில் தொடர் வெற்றிகளைக் குவித்துவருகிறது. முதல் இரண்டு இடங்களைக் குறிவைத்து அந்த அணி முன்னேறிவருகிறது. இதனால் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே வெற்றிக் கூட்டணியுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது.

தலைகீழான இரண்டாவது பாதி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதி போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றதைக் காண முடிந்தது. ஆனால் அந்த முடிவுகள் தற்போது தலைகீழாகிவருவதைக் காண முடிகிறது. துபாயில் கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வென்றது. குறிப்பாக இன்றைய போட்டி பிற்பகலில் நடப்பதால் முதலில் பீல்டிங் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது வெற்றியை வசமாக்கும் சிறந்த உத்தியாக அமையலாம்.

முதல் முறை

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் முதல் பிற்பகல் போட்டி இதுவாகும். மறுபுறம் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பங்கேற்ற இரண்டு பிற்பகல் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு முறையும் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

கேப்டன்கள் அதிகம்

ஐபில் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக பெங்களூர் கேப்டன் விராட் கோலியும் (837 ரன்கள்) பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும் (803 ரன்கள்) அதிக ரன்கள் விளாசியுள்ளனர்.

உத்தேச லெவன் அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்ராஜ் கெய்வட், ஃபாஃப் டூபிளஸி, அம்பத்தி ராயுடு, ஜகதீசன், தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், சார்துல் தாகூர் / ஆசிப், இம்ரான் தாஹிர், ஜாஸ் ஹாசில்வுட்/ மிட்சல் சாண்ட்னர்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கே), டிவிலியர்ஸ், குர்கீரத் சிங், கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இஸ்ரு உதானா, நவ்தீவ் சாய்னி, முகமது சிராஜ், யுஜ்வேந்திர சஹல்.

More News

உதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா? சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்

கமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் தினந்தோறும் நடக்கும் சண்டைகளில் ஒன்றாக அர்ச்சனா மற்றும் பாலாஜி சண்டையை எடுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் தானே முன்னின்று இருக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ!

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே வித்தியாசமான போட்டியாளராக இருப்பவர் சுரேஷ் தான். பொதுவாக வயதான போட்டியாளர்கள் எனக்கென்ன என்று அமைதியாக இருப்பார்கள்

தியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பின்படி சமீபத்தில் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன

இந்த வாரம் எவிக்சன் யார்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் ஆஜித், சுரேஷ், அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய ஐவர் உள்ளனர். இதில் குறைவான வாக்குகள் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்