close
Choose your channels

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் ஷாருக் கான் டீமை சக்சஸ் பாதைக்குத் திருப்புவாரா தினேஷ்...

Friday, September 18, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயணம் குறித்து அலசலாம். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2014க்கு பிறகு சிறப்பாக செயல்படவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே அந்த அணியில் இடம் பெற்றிருந்த பிரண்டன் மெக்கலம் பெங்களூரு அணிக்கு எதிராக 158 ரன்கள் விளாசி அசத்தினார். சுமார் 12 ஆண்டுகளாக ஒரே போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அது உள்ளது.

சொதப்பிய முதல் மூன்று சீசன்கள்

அந்த அதிரடி துவக்கத்துக்கு பின் ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் பங்கேற்ற 8 அணிகளில் முதல் மூன்று சீசன்களில் நாட் அவுட் சுற்றுக்கு முன்னேறாத ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். 2009ஆம் ஆண்டு கொல்கத்தா அணி படுமோசமாக 9 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. மேலும் சுமார் 11 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் உருவாக்கப்பட்ட 8 அணிகளில் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் ஒரு முறைகூட முதலிடத்துக்கு முன்னேறியது இல்லை. ஆனால் 2014இல் கொல்கத்தா அணியின் தலையெழுத்து மாறியது. அந்த அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இது வரலாறு    

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 2012இல் கோப்பை வென்றபோதும் 2014இல்தான் அந்த அணி அதிரடியாக வெற்றிப் பாதைக்குத் திரும்பியது.

குறிப்பாக 2015 வரை தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பதிவு செய்தது. இது ஐபிஎல் வரலாற்றில் புது சாதனையாகத் திகழ்ந்தது. 2014இல் கோப்பை வென்ற கொல்கத்தா அணி, அதே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் விருதையும் வென்றது. இன்று வரை இந்தச் சாதனையை வேறு எந்த அணியும் செய்தது இல்லை. மேலும் ஐபிஎல் ஃபைனலில் அதிக ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற பெருமை பெற்றது. 2012இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 192 ரன்களையும், 2014இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 200 ரன்களையும் வெற்றிகரமாக சேஸ் செய்தது.

நரேன், ரசல் சாதனை

கொல்கத்தா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் சுனில் நரேன் (110 போட்டிகள்). அதே போல அந்த அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரும் நரேன்தான். மேலும் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன் ஆகியோருக்குப் பின் அதிக முறை அதிக மதிப்பு மிக்க வீரருக்கான விருதை அதிக முறை பெற்ற வீரர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ரே ரசல்தான். இவர் 2015, 2019ஆம் ஆண்டுகளில் இந்த
விருதை வென்றுள்ளார்.

மும்பையிடம் 19 தோல்விகள்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிகத் தோல்விகளைச் சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை கொல்கத்தா அணி இதன் மூலம் படைத்துள்ளது. சுமார் 6 ஆண்டுகளாக கொல்கத்தா அணி கோப்பையை வெல்லவில்லை இதனால் இந்த முறை கட்டாயம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நிலையில்
கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.

நட்சத்திர வீரர்கள்

கொல்கத்தா அணி சீனியர் வீரர்களான ஆண்ரே ரசல், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன் ஆகியோரை அதிகம் சார்ந்துள்ளது. அதே நேரம் இங்கிலாந்தின் இயான் மார்கன், நியூசிலாந்தின் லூகி பெர்குசன் ஆகியோர் மீது அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் இளம் வீரர்களான டாம் பாண்டன், சுப்மன் கில் ஆகியோரும் இந்த ஆண்டு கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் பட்டியலில் உள்ளதால் கொல்கத்தா அணி சாதிக்க வாய்ப்பு உள்ளது.

கேகேஆர் போட்டிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.