close
Choose your channels

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு இத்தனை கோடியா? பரிசுகள் விபரங்கள்!

Saturday, October 16, 2021 • தமிழ் Sport News Comments

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு மற்றும் கோப்பை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் வழங்கப்பட்ட பரிசுகள் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுப்லஸ்ஸிஸ் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

அதே போல் ஆரஞ்சு கேப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது

பர்ப்பிள் கேப் வாங்கிய பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கேம் சேஞ்சர் என்ற பட்டமும் ரூ.10 லட்சம் பரிசும்  ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்படது. மேலும் ஹர்ஷல் படேலுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

எமர்ஜென்சி பிளேயர் என்ற பட்டம் ருத்ராஜ் கெய்க்வாட் அவர்களுக்கு வழங்கப்பட்டது 

விவோ ஃபெர்பெக்ட் கேட்ச் பிடித்த வீரர் என்ற பரிசு ரவி பிஷ்னோய்க்கு வழங்கப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் பரிசளிக்கபட்டது

சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற பட்டமும் ரூ.10 லட்சம் பரிசு ஹெட்மயருக்கு அளிக்கப்பட்டது. இந்த பரிசை அவரது சார்பில் பிராவோ பெற்று கொண்டார்.

சூப்பர் சிக்சர்கள் என்ற பட்டம் 30 சிக்சர்கள் அடித்த கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

பிளேயர் ஆஃப் தி சீசன் என்ற பட்டமும் ரூ.10 லட்சமும் வெங்கடேச அய்யருக்கு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz