கொரோனா வைரஸ் எதிரொலி: ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா? 

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

சீனா உள்பட உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் ஒருசில மாநிலங்களிலும் பரவி இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் மைதானத்தில் நடத்தலாம் என்றும், போட்டியை தொலைக்காட்சி மற்றும் செயலிகள் மூலம் ஒளிபரப்பு செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த ஆலோசனையை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து அரைஇறுதிப்போட்டியில் 60,000 பேர் இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லை என்றும் ஐபிஎல் போட்டியையும் ஆடியன்ஸ்களுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிசிசிஐ என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடப்படும்: அதிரடி முடிவால் பரபரப்பு 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: ரஜினி வழக்கு குறித்து அதிரடி உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி துக்ளக் இதழின் பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது

இந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..!

20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் மொபைல்களில் இது சிறந்ததாக இருக்கும் என விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது. சிகப்பு, நீலம் மற்றும் பர்பிள் நிறங்களில் இந்த மொபைலானது கிடைக்கிறது.

சச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..! வைரல் வீடியோ.

"சிறு குழந்தையோடு நேரம் செலவழிப்பது எப்போதும் சந்தோசம் தான். இம்ரான் ஒரு நாள் உன்னுடைய தசைகள் என்னைவிட உன்ன தந்தையை வீட்டா வலிமையானதாக மாறும்"

ரஜினி என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்: அர்ஜூன் சம்பத்

ரஜினிகாந்த் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் இதனை சொல்வேன் என கரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது