close
Choose your channels

வானில் மில்லியன் ஸ்டார்கள் இருந்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார் இவர் தான்: ரஜினியை சந்தித்த ஐபிஎல் வீரரின் பதிவு..!

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு இரண்டு ஐபிஎல் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சென்று அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது என்பதும் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேச ஐயர் ஆகிய இருவரும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர். இருவருடனும் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து வரும் சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ’நீங்கள் தினமும் மில்லியன் கணக்கான நட்சத்திரங்களை இரவில் வானத்தில் பார்க்கலாம். ஆனால் ஒரே ஒரு முறை வாழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து விட்டால் நம் வாழ்வில் ஒரு அர்த்தம் கிடைக்கும். உலகின் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. மேலும் ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு பரிசாக கொடுத்த LIVING WITH THE HIMALAYAN MASTERS" என்ற புத்தகத்தை நான் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ‘தலைவர் தரிசனம் என வெங்கடேஷ் அய்யரும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.