close
Choose your channels

சிலிர்த்து எழுந்த சிஎஸ்கே - தொடர்

Wednesday, April 13, 2022 • Tamil Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெயின் பிக்சர் இன்னும் பாக்கி இருக்கு

4 தொடர் தோல்விகளுக்கு பிறகு தனது முதல் வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுதான் கம் பேக் என்பது போல ஒரு அதிரடியான வெற்றியை கைப்பற்றியது சென்னை அணி.

ஜடேஜா தலைமை சரியில்லை, அணியின் பவுலிங் சரியில்லை என்று எழுந்த பல விமர்சனங்களுக்கு பெரிய முற்று புள்ளியை வைத்தது சென்னை அணி. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து அம்சங்களிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தியது ஜடேஜா தலைமையிலான சென்னை.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே டி வை பாட்டில் ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என்று ஜடேஜா கூறினார். இந்த போட்டியிலாவது சென்னை தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற ஏக்கத்துடன் இருந்த சென்னை அணியில் ரசிகர்களுக்கு ஒரு முழு விருந்தை சென்னை அணி வழங்கியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்ய்யய் சென்னை அணியின் சார்பாக ருத்துராஜ் கெய்க்வாடும், உத்தப்பாவும் களமிறங்கினர். இந்த போட்டியில் ருத்துராஜ் கண்டிப்பாக தனது திறமையை வெளிகொண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய மெயின் அலியும் 3 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, மறுபுறம் உத்தப்பா பொறுமையான தொடக்கத்தை கொடுத்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். பிறகு சிவம் துபே - உத்தப்பா ஜோடி பெங்களூரு அணியின் பந்துகளை எல்லா புறமும் விலாச துவங்கினர்.

முதல் 10 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், சிவம் துபே - உத்தப்பா ஜோடி 165 ரன்கள் குவிக்க சென்னை 216 ரன்கள் எடுக்க உதவியது. உத்தப்பா 50 பந்துகளில் 4 பௌண்டரிகள், 9 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்கள் குவித்து ஹசரங்கா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி தனது மூன்றாவது விக்கெட்டான உத்தப்பாவை இழக்கும்போது ஸ்கோர் 201 ஆனால் வந்த முதல் பந்திலேயே ஹஸரங்காவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா. மறுமுனையில் தனது உச்சகட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சிவம் துபே. 46 பந்துகளில் 5 பௌண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா விக்கெட்டை தொடர்ந்து தல தோனி களமிறங்கினாலும், ஒரு பந்தும் விளையாடவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. 217 என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸியும், அனுஜ் ராவத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டாக 8 ரன்களில் பாப் டு பிளெஸ்ஸி வெளியேற பிறகு வந்த பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் நடையைக்கட்டினார். அவர்களை தொடர்ந்து அனுஜ் ராவத்தும் 12 ரன்களில் வெளியேற, ஷாபாஸ் அஹம்மதும், கிளென் மேக்ஸ்வெலும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தனர் ஆனால் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 26 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல் ஜடேஜா வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பிறகு ஷாபாஸ் அஹமத்துடன் ஜோடி சேர்ந்து புதிய வீரர் சுயாஷ் அதிரடி காட்ட தொடங்கினார்.

18 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் குவித்த சுயாஷ் தீக்க்ஷனா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாபாஸ் அஹமத்தும் தீக்க்ஷனா பந்தில் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க பெங்களூரு அணியின் நிலை மோசமானது. இருந்தாலும் தினேஷ் கார்த்திக் களமிறங்கி அதிரடி காட்ட தொடங்கியதால் சென்னைக்கு பிரச்சனை போலிருக்கிறதே என்று தோன்றியது ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு மறுமுனையில் யாரும் சரியாக நின்று விளையாடவில்லை. ஒற்றை ஆளாக இலக்கை அடைய போராடி 14 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

தீக்க்ஷனா சிறப்பாக பந்துவீசி வெறும் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடி 95 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த சிவம் துபே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

சென்னை அணி, ஒரே ஆட்டத்தில் மொத்த விமர்சங்களுக்கும், அணியின் ரசிகர்களுக்கும் எல்லா அம்சங்களிலும் மிக சிறப்பாக ஆடி, போன வருடம் கோப்பையை தட்டிச் சென்ற அதே சென்னை அணிதான் என்று நிரூபித்துள்ளது. மேலும், ஜடேஜா கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதுக்கு மேல எங்க ஆட்டத்த பாருங்கடா என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

Follow us on Google News and stay updated with the latest!