close
Choose your channels

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்: மும்பை இந்தியன்ஸ்

Tuesday, September 8, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்தாவது முறையாகப் பட்டையைக் கிளப்புமா டான் ரோஹித்தின் மும்பை! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கில்லி அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரே தலைவலியாக உள்ள அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாறு குறித்து பார்க்கலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19இல் துவங்கவுள்ளது . இந்நிலையில் கடந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

அதிக கோப்பைகள்:

இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற புது வரலாறு படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இந்த அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் துவக்கத்தில் மிகவும் தடுமாறியது. அனுபவ சச்சின், அதிரடி ஜெயசூர்யா எனப் பலர் இருந்த போதும் ஆரம்ப காலத்தில் தடுமாறியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை அணி குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம். மும்பை அணியில் பல ஜாம்பவான் வீரர்கள் உள்ளனர். தவிர, சிறந்த பயிற்சியாளர்கள், அதிக முறை கோப்பை வென்ற அணி, அதிதீவிரமான ரசிகர் பட்டாளம் என அதிக செல்வாக்கு கொண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி
திகழ்கிறது.

111.9 மில்லியன் டாலர்கள்:

2008இல் ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணியை ரூ. 111.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கியது. அப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அணிகளில் மும்பை அணி தான் கோடீஸ்வர
அணியாக இருந்தது. சச்சின் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் மும்பை அணியில் இடம் பெற்றிருந்ததால் 2008இல் அந்த அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2008 மற்றும் 2009 இல் மும்பை
ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

ரோஹித் எழுச்சி:

பிறகு 2010இல் நடந்த தொடரில் மும்பை அணி எழுச்சி பெற்று ஃபைனல் வரை முன்னேறியது. ஆனால் அதில் சென்னை அணி வென்றது. மும்பை அணியின் கோப்பை கனவு ரோஹித் தலைமையில் 2013இல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டின் பாதியில் ரோஹித் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு (2013, 2015, 2017 & 2019) ரோஹித் தலைமையில் மும்பை அணி கோப்பை வென்று சாதித்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக மும்பை அணி 109 போட்டிகளிலும், ஒட்டு மொத்த டி-20 வட்டார கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகபட்சமாக 118 போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதிக ரன் வித்தியாசம்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையைச் செய்துள்ளது. 2017இல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

1 ரன் ராசி:

மும்பை இந்தியன்ஸ் அணி பல முறை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாகவும் திகழ்கிறது. இதுவரை மூன்று முறை (2012 - புனே வாரியர்ஸ், 2017 ஃபைனல் - ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ், 2019
ஃபைனல் - சென்னை சூப்பர் கிங்ஸ்) மும்பை அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதில் 2 முறை ஃபைனலில் வென்றுள்ளது.

சிம்ம சொப்பனம்:

அதேபோல வெற்றி அணியான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது மும்பை அணி. அதில் 3 ஃபைனல் வெற்றிகளாகும். அதே போல கடந்த 7 ஐபிஎல் தொடர்களின் துவக்கப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த மும்பை அணி, பின்னர் தொடர் வெற்றிகளைக் கண்டு ஃப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்படி அடுக்கடுக்காகச் சாதனைகளைக் குவித்துள்ள மும்பை அணியில் வீரர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு குறித்த சில சர்ச்சைகளும் உள்ளன. ஐபிஎல் அணிகளில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு உள்ளதால், டி-20 போட்டிகளில் ஒண்டி ஆளாகவே போட்டியை வெல்லக்கூடிய ஆஸ்திரேலிய வீரர் கிலென் மேக்ஸ்வெல் போன்றவர்களுக்கே வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதே நேரம் இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற பல இளம் வீரர்களும் அதே மும்பை அணியில் தங்களின் திறமையை நிரூபித்துச் சாதித்துள்ளனர். ஐபிஎல் அரங்கில் வெற்றி அணியாகத் திகழும் மும்பை அணி இந்த ஆண்டும் ஐந்தாவது முறையாகக் கோப்பையை வெல்லும் என மும்பை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.