close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் இணைந்த 'இறைவி' நடிகை

Thursday, July 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'காக்கா முட்டை' என்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'குற்றமே தண்டனை' விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் விஜய்சேதுபதி நடிக்கும் 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தில் 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகாசிங் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். அவர்தான் பூஜா தேவரியா. சமீபத்தில் வெளியான 'இறைவி' படத்தில் மலர்விழி என்ற கேரக்டரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' படத்தின் நாயகியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர், வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்பு தயாரித்து வருகிறார். கே இசையமைக்கும் இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், அனுசரண் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.