'இறைவி'யின் அமெரிக்கா ரிலீஸ் திட்டம்.

  • IndiaGlitz, [Sunday,May 29 2016]

கார்த்திக் சுப்புராஜின் 'பீட்சா', ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் இயக்கியுள்ள மூன்றாவது படமான 'இறைவி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன்களும் வித்தியாசமான முறையில் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் அமெரிக்காவில் சுமார் 50 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், ஜூன் 2ஆம் தேதி இந்த படத்தின் பிரிமியர் காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.