2வது வாரத்திலும் கலக்கல் வசூல் தந்த 'இரும்புத்திரை'

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வெளியான முதல் வார இறுதி நாட்களிலே நல்ல வசூலை குவித்த நிலையில் இரண்டாவது வாரத்திலும் முதல் வாரம் போலவே கலக்கலான வசூலை கொடுத்துள்ளது.

இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 14 திரையரங்குகளில் 178 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.90,18,537 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்ததில் இருந்தே இந்த ஹிட் என்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த படம் ரிலீஸ் தினமான மே 11 முதல் மே 20 வரையிலான 10 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.3,12,04,226 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் தமிழக வசூல் குறித்த தகவலை பார்ப்போம்

More News

கமல் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ரஜினி மகளிர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கோலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல காமெடி நடிகரின் 4 வயது மகள்

கோலிவுட்டில் திரைநட்சத்திரங்கள் அறிமுகமாவது புதியது இல்லை. சிவாஜி கணேசனின் வாரிசுகள் முதல் நடிகை மீனாவின் மகள் வரை கோலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் தான்.

எம்ஜிஆர்-சிவாஜி முதல் அஜித்-விஜய் வரை நடித்த கேரக்டரில் முதல்முறையாக பிரபுதேவா

சினிமா ஹீரோக்களுக்கு காக்கி சட்டை அணிய வேண்டும் என்பது ஒரு கனவு என்றே சொல்லலாம்

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசியவிருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'செம போத ஆகாதே': மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

அதர்வா நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'செம போத ஆகாதே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்றது.