'இரும்புத்திரை' படத்தின் வசூல் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷாலின் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூலை பெற்ற படம், விஷால் படங்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. 'இரும்புத்திரை' திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.61 கோடி வசூல் செய்துள்ளது என்பது ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும். தமிழகத்தில் இந்த படம் ரூ.26.35 கோடி வசூல் செய்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் ரூ.5.71 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆந்திராவில் ரூ.19.6 கோடியும், கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் ரூ.3.21 கோடியும், வெளிநாடுகளில் ரூ.11.5 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமை ரூ.17 கோடிக்கு மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது இந்த படம் அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்றுக்கொடுத்த படமாக அமைந்துள்ளது.

More News

இரண்டாவது வாரத்திலும் களைகட்டிய 'டிக் டிக் டிக்' வசூல்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செள்நதிரராஜன் இயக்கத்தில் டி.இமான் இசையில் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான

சசிகுமாரின் 'அசுரவதம்' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

சசிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அசுரவதம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் சராசரியாக இருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதர்வாவின் 'செம போத ஆகாதே' ஓப்பனிங் வசூல் எப்படி?

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய அதர்வா முதன்முதலில் தயாரித்து நடித்த 'செம போத ஆகாதே. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை

'விசுவாசம்' படத்தில் நயன்தாரா கேரக்டர்: ஒரு ஆச்சரிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிவடைந்தது.

விஜய் சிகரெட் பிடிப்பதெல்லாம் ஒரு பிரச்சனையா? சரத்குமார் விளாசல்

தளபதி விஜய் நடித்த படம் சமீபகாலமாக பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. ஒருவிதத்தில் அந்த பிரச்சனைகள் அவருடைய படத்தின் புரமோஷன்களாகவும் பயன்பட்டன