'இறுதிச்சுற்று' படத்தில் நடித்தவரா இவர்? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!
கடந்த 2016ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதிச்சுற்று’திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங் சகோதரியாக நடித்த நடிகை மும்தா சர்க்கார் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிரபல மேஜிக் மேன் சர்க்கார் அவர்களின் மகள் என்பதும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்டக்கது.
இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகாவின் சகோதரியாக அடக்க ஒடுக்கமாக நடித்த இவரா தற்போது கவர்ச்சி போஸில் கலக்குவது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மும்தாஜ் சர்க்காரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது