close
Choose your channels

கதாநாயகியாக அறிமுகமாகிறாரா ரோஜாவின் மகள்?

Saturday, August 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரோஜாவின் மகள் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ரோஜா மற்றும் இயக்குனர் செல்வராகவன் தம்பதிகளுக்கு அன்ஷூ மாலிகா என்ற மகள் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் ஆகிய பயிற்சிகளை எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூ கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக ரோஜா தெரிவித்திருந்த நிலையில், தற்போது படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்தவுடன் அவர் கதாநாயகி நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நடிகை ரோஜாவே தனது மகளுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாகவும் அதேபோல் இயக்குனர் செல்வராகவனும் ஒரு படத்தை இயக்குவது குறித்த நுட்பங்களை மகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நடிகை ரோஜாவின் மகள் விரைவில் தமிழ் தெலுங்கு சினிமாவில் கலக்குவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.