நடிகை சாயிஷா கர்ப்பமா? இந்த ஸ்மைலிக்கு என்ன அர்த்தம்?

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில் சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை சாயிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் You + me= ❤️������ என்று ஒரு பதிவை குழந்தை ஸ்மைலியுடன் பதிவு செய்துள்ளார். இதனால் சாயிஷா கர்ப்பமாக இருக்கலாம் என்றும் குழந்தை ஸ்மைலிக்கு அதுதான் அர்த்தம் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்யா-சாயிஷா ஜோடி இதனை மறுக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

சூர்யாவின் 'காப்பான்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சாயிஷா அதன்பின்னர் வேறு சில படங்களின் வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல் மறுத்ததற்கு இப்போதுதான் காரணம் தெரிவதாக பலர் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.