தென்னிந்திய எண்ட்ரிக்கு நயன்தாராவை விட இருமடங்கு சம்பளம் பெறும் பாலிவுட் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி, விஜய், சிரஞ்சீவி போன்ற பெரிய ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவை அடுத்து அனுஷ்கா அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார்

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் ராம்சரண் ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக 9 கோடி சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நயன்தாராவை விட இருமடங்கு சம்பளம் பெறும் நடிகையாகவும், தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ராம் சரண் ஜோடியாக அலியாபட் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 இந்திய மொழிகளில் உருவாகி வருகிறது மேலும் இந்த படத்தில் சீதா என்ற கேரக்டரில் அலியாபட் நடித்து வருவதாகவும் இந்த கேரக்டர் வலிமையுள்ளதாக இருக்கும் என்றும், இந்த கேரக்டரை மையப்படுத்தியே படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

More News

நயன்தாராவின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலண்ட் ராவ் இயக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் அஞ்சலி?

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில், அவர் நடித்து வரும் அடுத்த படமான 'ஹீரோ' என்ற படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்!

பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து ஆலயம் புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ஸ்ரீராம். இந்த நிறுவனத்தின் சார்பில்

நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தால்.... அமைச்சர் ஜெயகுமார் பேட்டி!

நடிகர் விஜய் இதுவரை எந்த ஒரு மேடையிலும் தான் அரசியலில் சேருவதாகவோ, ஏதாவது அரசியல் கட்சியில் இணைய விரும்புவதாகவோ கூறியதே இல்லை.

விஜய்சேதுபதியின் 'லாபம்' படத்தில் இணைந்த இளம் ஹீரோ

நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் சுமார் எட்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று