close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ஆல்யா மானஸா

Saturday, July 20, 2019 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாளை ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவுள்ள நிலையில் மீதியிருக்கும் 13 போட்டியாளர்களுடன் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 'ராஜா ராணி' புகழ் ஆல்யா மானஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது தனது காதலருடன் ஆல்யா மானஸா மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அழகிய இடம், நல்ல தட்பவெப்ப நிலை, கடலின் அழகு, சைக்கிள் ரைடிங் ஆகியவை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுற்றுப்பயணத்தை முழு அளவில் ரசிப்பதாகவும் ஆல்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இன்னும் ஒருசில நாட்கள் மாலத்தீவில் இருக்க திட்டமிட்டுள்ளதால் இப்போதைக்கு அவர் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக மாற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது

டப்மாஷ் வீடியோ, ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ஆல்யாமானஸா, 'ஜூலியும் 4 பேரும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz