'சர்கார்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'அண்ணாத்த'?

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் தளபதி விஜய்யின் ’சர்க்கார்’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த படம் முதல்நாளில் ரூபாய் 34 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் எனவே முதல் நாளில் 32 கோடி ரூபாய் வசூல் செய்த சர்க்கார் படத்தின் சாதனையை ‘அண்ணாத்த’ படம் முறியடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியை படக்குழுவினரும் சமூகவலைதளத்தில் லைக் செய்து உள்ள நிலையில் இந்த செய்தியை அவர்கள் உறுதி செய்வதாகவே கருதப்படுகிறது.

இருப்பினும் ஒரு சிலர் ‘அண்ணாத்த’ திரைப்படம் 25 கோடி தான் முதல் நாள் வசூல் ஆனது என்றும் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது உண்மையாகவே தயாரிப்பு தரப்புக்கு மட்டுமே தெரியும் என்பதால் தயாரிப்பு தரப்பு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் இரண்டாவது நாளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் மூன்றாவது நாளாக இன்றும் திரையரங்குகளில் ரசிகர்கள் அரங்கு நிறைந்து காணப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது . மிக விரைவில் அதாவது நாளை அல்லது நாளை மறுநாள் இந்த படம் 100 கோடி வசூலை எட்டும் என்று சமூக வலைத்தள டிராக்கர்கள் கூறி வருகின்றனர்.

More News

கமல்ஹாசனை பேச விடாமல் பட்பட்டென்று பேசிய தாமரை-பாவனி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் இடையே ஆவேசமான சண்டை வந்தது என்பதும் ஒருவருக்கொருவர் அடிப்பதற்காக கை ஓங்கும் அளவிற்கு அந்த சண்டை நீடித்தது என்பதையும் பார்த்தோம்.

காதலியை அறிமுகம் செய்த கே.எல்.ராகுல்… வைரலாகும் பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ் மேனாகவும்

கடும் கண்டனங்கள் எதிரொலி: 'ஜெய்பீம்' படத்தில் மாற்றப்பட்ட காட்சி!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் வாதிகளும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக

சென்னையில் வெளுத்து வாங்கப்போகிறது கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்று இரவும் நாளையும் கன மழை வெளுத்து வாங்க போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

அச்சுறுத்தும் டெங்கு… காஷ்மீரில் 1,000 ஆக உயர்ந்த பாதிப்பு!

மழைகாலத்தில் பரவும் தொற்றுநோயான டெங்கு தற்போது இந்தியா